இணையமலர் செய்திகள்

Tuesday, January 25, 2011

குறைந்து வரும் கிளிகள்



உலகில் 600 வகையான கிளிகள் காணப்படுகின்றன. பறவைகள் இரு அலகையும் பயன் படுத்தும். ஆனால் கிளிகள் மேல் அலகை மட்டுமே பயன்படுத்தும். இது கிளிகளின் சிறப்புதன்மை ஆகும். கிளி ஒரு ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால், கிளிகளின் இனப்பெருக்கம் குறைந்த அளவிலேயே இருக்கிறது. மற்ற பறவைகளைப் போல, கிளிகளை யாரும் இறைச்சிக்காக வேட்டையாடுவதில்லை. இருந்தும் கிளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கிளிகளின் கேட்கும் திறன் அதிகமாக இருப்பதால், இவற்றை நெருங்குவது கடினமாகும். எனவே கிளிகளை, யாரும் வேட்டையாடுவது மிகவும் கடினமாகும்.கிளிகள் சைவப் பறவைகளாகும். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள கியா வகை கிளிகள் மட்டுமே இறைச்சியை உண்டு வாழ்கின்றன. மனிதரின் பேச்சை எதிரொலிக்கும் கிளிகள், மரப் பொந்துகளில் வாழும் இயல்பைப் பெற்றுள்ளன.



டாட்.காம்



விரைவில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மட்டுமே தற்போது ஆயிரத்து 751 ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. பெருநகரங்கள், நகரங்களைத் தவிர்த்து, கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2 மற்றும் 3ம் தர நகரங்களில், தொழில் துவங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் துறைக்கான வேலைவாய்ப்புகளைப் பெறும் வழிமுறைகளை எளிமையாக்க, www.careerplantinum.comஎன்ற வெப்சைட் செயல்படுகிறது.